தமிழ்நாடு முழுவதும் போதை பழக்கம் அதிகரித்து வருவதால் போதை பழக்கத்தை ஒழிக்கும் வகையில் இன்று தமிழ்நாடு முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்து காவல்துறையினரும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சோமங்கலம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காவல் ஆய்வாளர்கள் ராஜ்குமார், அசோகன் தலைமையில் காவலர்கள் சென்று மாணவர்களுடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அப்போது மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்தான பதாகைகளை ஏந்தியவாறு அந்தந்த ஊர்களில் உள்ள தெருக்கள் வழியாக சென்று போதை ஒழிப்பு குறித்து கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது மாணவர்கள் மத்தியில் காவல் ஆய்வாளர்கள் போதை பொருள் ஒழிப்பு குறித்தான அவசியத்தை எடுத்துரைத்தனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது சோமங்கலம், மணிமங்கலம் படப்பை என 5 கிமீ தூரத்திற்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
இந்த பேரணியில் தாம்பரம் மாநகர காவல் உதவி ஆணையர் இளஞ்செழியன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன் குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி, படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்