பெரம்பலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நாட்டார்மங்கலம் ஜெயராமன் வரவேற்புரையாற்றினார்.
செயற்குழு உறுப்பினர் கிருஷ்ண ஜனார்த்தனன், கொள்கை பரப்பு செயலாளர் காரை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் உறுப்பினர் சேர்க்கை பற்றி உரையாற்றினார்.
பிறகு புதிய உறுப்பினர் படிவங்களை மாவட்ட வட்டார நிர்வாகிகளிடம் வழங்கினார். இதில் வட்டாரத் தலைவர்கள் வேப்பூர் இளவரசன் ஆலத்தூர் கிழக்கு மூர்த்தி செந்துறை அறிவழகன் வேப்பந்தட்டை அ.இராமச்சந்திரன் அசோகன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டு உறுப்பினர் படிவங்களை பெற்றுச் சென்றனர் .மாவட்ட வர்த்தக அணி தலைவர் இளையராஜா நன்றி உரை வழங்கினார்.