விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க 86வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பி.எஸ். குமாரசாமி ராஜா நூற்றாண்டு ஞாபகார்த்த திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. விழா துவக்கத்தில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டிற்கும் ராம்கோ சேர்மன் பி. ஆர். வெங்கட்ராமராஜா மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதர நிர்வாகிகளும் அப்படியே தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் பி. ஆர். வெங்கட்ராம ராஜா தலைமையில் துணைத் தலைவர் பத்மநாபன் வரவேற்றுப் பேசினார். செயலாளர் எம்.சி. வெங்கடேஸ்வர ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் ஆடிட்டர் நாராயணசாமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார். விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்