கும்பகோணம் ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கான பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
முகாமில் ஜவுளி வியாபாரிகள்
சங்க செயலாளர் தர்மராஜன் தலைமை தாங்கினார்,துணைத் தலைவர் மோகன் முகாமை தொடங்கி வைத்தார்.
ஜவுளி சங்க தலைவர் முகம்மது ஜியாவுத்தீன், பொறியியல் கல்லூரி நிர்வாகி சிராஜுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.காப்பீட்டுத் திட்ட மாவட்ட பொறுப்பு அதிகாரி ராஜா கலந்து கொண்டு ஜவுளி வியாபாரிகள் சங்க ஊழியர்கள் குடும்பத்தினருக்கு குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு 200 க்கும் மேற்பட்டவர்கள் காப்பீட்டு திட்ட பதிவுகள் செய்து பயன் அடைந்தனர்.
முன்னதாக காப்பீட்டுத் திட்ட மாவட்ட பொறுப்பு அதிகாரி ராஜா கூறுகையில் :-
சுகாதார குறியீடுகளில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னிலை வகிக்கிறது.ஏழை எளியோர்களுக்கு மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்கும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு இத்திட்டம் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றனர்.
இந்த திட்டத்தில் 1027 சிகிச்சை முறைகளுக்கும்,154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது என தெரிவித்தார்.
முகாமில் நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவபிரகாஷ்,ராஜேஷ் ஹேமந்த் குமார், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.