கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ்.
அறிஞர் அண்ணா கல்லூரியில் 78வது இந்திய சுதந்திர தின விழா.
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் தலைவர் சு. தனபால் அவர்களின் சுதந்திர தின உரையில் ,நமது இந்திய நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்தன.
இத்தகைய பிரிட்டிஷ் காலத்தில் அடிமைத்தளத்தில் இருந்து மக்களை மீட்டெடுத்த இந்தியாவை சுதந்திரம் அடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மஹாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், சந்திரசேகர் ஆசாத், பகத்சிங், திருப்பூர் குமரன், பாரதியார் மற்றும் ஜவஹர்லால் நேரு என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரத நாடு பலமொழிகளால் வேறுபட்டாலும் ஒருமைப்பாட்டிற்கும் பொறுமைக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த பரிசு தான் சுதந்திரம் என மாணவ மாணவியர்களுக்கு அறிவுறுத்துங்கள்என்று பேசினார்.
சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியில் உடற்கல்வி பேராசிரியர் திரு விஜய் ஆனந்த் திருமதி பிரேமா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். சுதந்திர தின நிகழ்வில் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்களும் பங்கேற்றனர் .நாட்டு நல பணித்திட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.