தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்கள்.
சிறப்பாகப் பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 482 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சீனிவாசன் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
சுதந்திரப் போராட்ட தியாகி
கி.லெட்சுமிகாந்தன் பாரதி (ஓய்வு) அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கௌரவித்தார்கள்.
தென்காசி மாவட்ட வாத்திய இசைக்குழு முதல்நிலைக்காவலர் எம்.சுப்பிரமணியன் தலைமையில் வாத்திய இசைக்குழுவினர் முன்நின்று அழைத்துச் செல்ல காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டு புறாக்களை பறக்க விட்டு மூவர்ண பலூனை பறக்க செய்தார்கள். அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் மூன்று பள்ளிகளுக்கு கேடயமும், மற்ற பள்ளிகளுக்கு நினைவுப்பரிசினை யும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தென்காசி நகராட்சிக்குட்பட்ட வடக்கு ரதவீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். .
இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் இந்திரா பிரியதர்ஷினி,
வருவாய் கோட்டாட்சியர்கள் லாவண்யா.
(சங்கரன்கோவில்), ஜெ.கவிதாமாவட்ட மாவட்ட தென்காசி மாவட்ட சமுக நல அலுவலர்
மதிவதனா
உட்பட அரசு அலுவலர்கள், காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.