திண்டுக்கல் மாவட்டத்தில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சாணார்பட்டி ஒன்றியம் எமக்கலாபுரம் ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் எமக்கலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணை தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள ஊராட்சி ஒன்றியம் பகுதியில் உள்ள அனைத்து கிராமபுர பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான சுகாதார துறை சார்ந்த ஆய்வாளர்கள் ஆலோசனையுடன் மருத்துவம் ,விவசாய துறை சார்ந்த அதிகாரிகள் விவசாய மனியம் குறித்தும், வருவாய் துறை, மற்றும் தோட்டகலை துறை குறித்து விவசாயிகளுக்கு அரசு மானியம் சார்ந்த விளக்கங்கள் அளித்தனர். கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று வியாதிகள் மற்றும் பராமரிப்பு குறித்து அரசு துறையினர் பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.மேலும் அண்ணா நகர் சாலைகளில் இரு புரமும் உள்ள புளியமரங்களாள் அவ்வப்போது சாலை விபத்துடன் உயிர் சேதமும் ஏற்படுவதை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கையுடன் ஊராட்சி மன்ற அலுவலர் இவ்வாண்டிற்கான கணக்கு வழக்குகளை முன்வைத்து பொது மக்களின் முன்னிலையில் வாசிக்க அதற்கான சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினார். பொதுமக்களுக்கு குடிநீர் குழாய் மற்றும் சாக்கடை வசதி போன்ற வற்றின் நிறை குறைகளை பற்றிய ஆலோசனைகளை கிராமபுர பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் விவாதிக்க பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
[10:59 AM, 8/16/2024] Haridass Arumugam: https://www.timesoftamilnadu.com/