தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 78 -ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டா டப்பட்டது. விழாவின் தொடக்கமாக மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்

முதுகலைத் தமிழாசிரியர் சு.சண்முக சுந்தரம்* வரவேற்புரையாற்றினார் விழாவிற்கு தலைமை ஆசிரியர் ச. ராஜகோபால் தலைமை வகித்தார். முதுகலை வணிகவியல் ஆசிரியர் ராஜன் முதுகலை வேதியியல் ஆசிரியர் பீர் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்

முதுகலை ஆங்கில ஆசிரியர் வே திருமலைச் செல்வி ,தொழில் கல்வி ஆசிரியர் கண்ணன் , பட்டதாரி கணித ஆசிரியர் பாலச்சந்தர் ,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் வழக்கறிஞர் எஸ் .ஆர். எஸ்.
ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஓவியஆசிரியர் முகைதீன் விழாவில் நாட்டுக்குழைத்த தலைவர்கள் குறித்த பேச்சு, கவிதை நடனம் கும்மி பாடல் , வில்லுப்பாட்டு, சிலம்பாட்டம் போன்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன பள்ளியின் சார்பில் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவில் அறிவியல் ஆசிரியர புதுமைராஜாத்தி விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் குமாரசேகர் நன்றி தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *