கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், சிவக்குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் ஆர். எஸ். வாசன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பணி ஆணை வழங்கப்பட்டது. பணி ஆணை பெற்ற ராம்பாக்கம் பகுதியில் உள்ள வேல்விழி சங்கர் என்பவரின் வீட்டுக்கு நேரடியாக சென்று பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தனர் . நிகழ்ச்சியில் பொறியாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் ஆறு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்