தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் குற்றாலம் சாரல் திருவிழாவின் 3 -வது நாள் சாரல் திருவிழா
மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருராட்சி கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற 3- வது நாள் சாரல் திருவிழாவில்
கலந்து கொண்ட கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், நினைவுப்பரிசு மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், தெரிவித்ததாவது,
மூன்றாவது நாள் சாரல் விழா நிகழ்ச்சியாக
பளு தூக்குதல் போட்டி மற்றும் ஆணழகன் போட்டி, ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் கோலப்போட்டி, யோகா, யோகா நடனம், காலாத் திலகம் திருமதி. என். சிந்து சுப்பிரமணியன் கிருஷா நாட்டியாலயா குழுவினரின் நாட்டிய நாடகம் நிகழ்ச்சி, சகா குழுவினர் வழங்கும் கிராமிய கலை நிகழ்ச்சி, கலைமாமணி திரு பிச்சைக்கனி குழுவினரின் ஒயிலாட்டம், விநாயகா நாட்டியாலயா வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி, நெல்லை பழவூர் சுபாஷ் அபிநய கீதம் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, தோவாளை முத்துக்குமார் குழுவினரின் தோல்பாவை கூத்து. சென்னை பல்கிஸ் குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி, ஆந்திரா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் தமிழோசை ராஜீவ் காந்தி கலந்து கொள்ளும் நெல்லை காஜா வழங்கும் சப்த ஸ்வரங்களின் சுகராகம் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது என தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை தென்காசி மாவட்டம் சார்பில் குழந்தை திருமணம், குடும்ப வன்முறை, பணி புரியும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காணொளி குறுந்தகட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டு
பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்
சீ. ஜெயசந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.