விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்
பாரத சாரண சாரணிய இயக்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டம் சார்பில்
2024 ம் கல்வியாண்டிற்க்கான மாநில ஆளுநர் விருதுத்தேர்வு மாதிரிச் சோதனை முகாம் சோழபுரம், பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது விருதுநகர் மாவட்ட முதன்மை ஆணையர் & மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளி) C.S.மலர் மற்றும் சிவகாசி கல்வி மாவட்ட முதன்மை ஆணையர் & மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) து. சிதம்பரநாதன் அவர்கள் தலைமையில், மாவட்ட செயலர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கு. இராமசுப்பிரமணியன் முன்னிலையில் தொடங்கியது.
விழாவில் கல்வி மாவட்ட தலைவர் N.R.S. சதீஷ்குமார் ராஜா மற்றும் கல்வி மாவட்ட ஆணையர் & தலைமை ஆசிரியர் C. ஜோதிமணிராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முகாமில் 31 பள்ளிகளைச் சேர்ந்த 163 சாரணர்கள் 100 சாரணியர்கள் உட்பட மொத்தம் 270 பேர் கலந்துகொண்டு பயிற்சி எடுத்தனர். முகாம் பயிற்சியாளர்களாக சாரணர் பிரிவுக்கு மாரியப்பன். அமல்ராஜ், அசோக்குமார், ஜெயக்குமார், மகேந்திரன் மற்றும் . மாடசாமி அவர்களும் சாரணியப் பிரிவுக்கு தயாபரிதாஸ் நேவிஸ் திருமதி. உஷா ஆகியோர் திருத்திய கோபான் பாடத்திட்டங்கள் முறையாக பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாம் உதவியாளராக. முத்துராஜ், குருநாதன் ஆகியோர் உடனிருந்து கவனித்து வந்தனர்.