கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய தலைவர் செல்வகாந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை கிடைத்திட வலியுறுத்தியும் சம்பள பாக்கி உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் கலைஞர் கனவு இல்லம் வீடு வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ள குடிசை வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கிட வலியுறுத்தியும் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க தமிழக அரசு ஒரு வீட்டிற்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஒதுக்கி உள்ள தொகையை உடனடியாக பயனாளிகள் பட்டியல் தயார் செய்து புதுப்பிக்க வலியுறுத்தியும் புதிதாக 100 நாள் வேலை அட்டை இல்லாத பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட குழு உறுப்பினர் பொன்னம்பலம் ஒன்றிய துணை செயலாளர் தண்டபாணி ஒன்றிய துணைத் தலைவர் கமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது