கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் மக்கள் முன்னணி விடுதலை சார்பில் கோயில் மனையில் பட்டா மற்றும் வீட்டு மனை கேட்டு தொடர் பிரச்சார இயக்கம் தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் மக்கள் முன்னணி விடுதலை சார்பில் கோயில் மனையில் பட்டா மற்றும் வீட்டு மனை கேட்டு தொடர் பிரச்சார இயக்கம் நிறுவனத் தலைவர் மனோகரன் தலைமையில் தொடங்கியது. மாவட்ட செயலாளர் ஈஸ்டர் ராஜ், மாவட்ட குழுவினர் பாபு மற்றும் வீரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோயில் நிலங்கள் மற்றும் அறநிலையத்துறை மற்றும் மடத்து இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு உடனடியாக குடியிருப்பு மனை வழங்கிட வேண்டும் என்றும், அறநிலையத்துறை சம்பந்தமாக வாடகை கேட்டு அச்சுறுத்தும் நிர்வாகத்தை கண்டிப்பது எனவும், மேற்கண்ட கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டு தொடர் பிரச்சார இயக்கம் தொடங்கியது. தொடர்ந்து இந்த பிரச்சார இயக்கம் கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் செல்வமணி, வழக்கறிஞர் ஜெயபாண்டியன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.