திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மேல்பாதி கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி சமேத ஸ்ரீ பசுபதி ஈஸ்வருக்கு இன்று ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,
தொடர்ந்து, சுவாமியின் சிரசில் திலா (எள்) அர்ச்சதை சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நிர்மால்யத்தை குளத்தில் விடப்பட்டது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.