“தேவி ஸ்ரீ ஜானகி மாதா ஆசிரமத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாக சாலை பூஜை நேற்று நடந்தது.”
தஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள குரு தேவி ஸ்ரீ ஜானகி மாதா ஆசிரமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர் சுவாமியின்
கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாகசாலை பூஜை நேற்று நடந்தது.காலை 8 மணிக்கு மேல்
புதிதாக யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம்,,வாஸ்து ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு மேல் ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர் சுவாமிகள் கலசத்தை ஆரவாரத்துடன் மெட்டு மோளத்துடன் யாகசாலையில் பிரவேசிக்கப்பட்டது.ஹோமம் செய்யும் துறவிகளின் கையில் திருக்காப்பு அணிவிக்கப்பட்டது.
குடங்கள் தெய்வமாக்கப்பட்டது. இறை சக்திகள் கும்பத்தில் இறக்கப்பட்டது. வேள்வி சாலை அமைத்து வழிபாடு நடந்தது.மூலம் அதனை தொடர்ந்து யாகச சாலையில் குண்டத்தில் யாகம் வளர்க்கப்பட்டு, முதல் கால யாக சாலை பூஜை தொடங்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு மேல் முதல் கால யாக சாலை பூஜை முடிவுற்று, பதினாறு தீப வழிபாடு நடந்தது.ரிக், யஜுர், சாம, அதர்வண வேத பாராயணம் ஓதி உணர்ந்து ஒப்படைத்து, பேரொளி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்