உலகத்தமிழர்களின் வாழ்வியல் மரமான பனை மரம் மீட்பு பயணத்தில் ஈடுபட்டுள்ள பூரணாங்குப்பம் தன சுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி, புதுச்சேரி ரோட்டரி கிளப் ஆப் எலைட்ஸ் உடன் இணைந்து பனை விதை நடவு நிகழ்ச்சி புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்ட அருகில் கரசூர் ஏரிக்கரையை சுற்றி சுமார் ஆயிரம் விதை நடவு பணி தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் எலைட் தலைவர் திரு.மார்கி அவர்கள் தலைமையில் ஒய்வு பெற்ற ஆசிரியர் திரு .இராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் Rotary Club Elite முன்னால் தலைவர்கள் & நிர்வாகிகள், மற்றும் பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் ஆகியோர் பங்கு பெற்றனர். உதவி புரிந்த தனசுந்தரம்மாள் சாரி டெபிள் சொசைட்டி (DSC-Society) தன்னார்வலர்கள் டோண்ட் வேஸ்ட் புட் ஸ்டீபன் ராயப்பா, மனித உரிமை கழக திரு.சிவச்சந்திரன், சந்திரசூட், ஆகியோருக்கு பங்கு பெற்றனர்.கரசூர் பொதுமக்கள் கலந்து கொண்டு பனை விதை நடவு செய்தனர்.