எ .கா .த . தர்மராஜா பெண்கள் கல்லூரியில் புதிய மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சி
இராஜபாளையம்
எ.கா .த . தர்மராஜா பெண்கள் கல்லூரியில் "புதிய மாணவிகள் வரவேற்பு " ஒரு வார நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் N. கார்த்திகேயன் ராம்கோ இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி அவர்கள் முதலாமாண்டு மாணவிகளுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்புரையாற்றினார்.
முனைவர்
எஸ். சிதம்பரநாதன் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாய் தந்தைக்கு மரியாதை, படிக்கும் போது குறிப்பெடுத்தல், இறைபக்தி, உழைப்பின் முக்கியத்துவம், திருக்குறள், நாலடியார், ஒளவையார் பாடல்கள் மூலம் திறமைகளை வளர்க்கும் விதம் பற்றி மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்.
கல்லூரி தாளாளர் ஏ.கே. டி. கிருஷ்ணம ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர். ஜமுனா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். துணை முதல்வர் முனைவர். மஞ்சுளா தேவி மற்றும் இயற்பியல் துறை தலைவி ஜெனிபர் அவர்கள் அறிமுக உரை வழங்கினார்கள்.
கல்லூரியில் பணிபுரியும் அனைத்துத் துறை தலைவர்களும் வெவ்வேறு தலைப்புகளில், திறன் மேம்பாடு, ஆதரவு அமைப்பு விழிப்புணர்வு, கல்வி தயாரிப்பு மற்றும் நிறுவன மதிப்புகளை புரிந்து கொள்வது, செயலில் பங்கேற்பதை ஊக்குவித்தல் பற்றி உரையாற்றினார். மாணவி தேவி ஸ்ரீ நன்றியுரை வழங்கினார்.