உத்தம பாளையத்தில் அண்ணா திமுக உறுப்பினர் அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் எஸ் டி கே ஐக்கையன் வழங்கினார். தேனி மேற்கு மாவட்டம் அண்ணா திமுக சார்பாக அதன் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி கே ஐக்கையன் தலைமையில் உத்தம பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் அண்ணா திமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட அண்ணா திமுக துணைச் செயலாளர் சற்குணம் மாவட்ட பொருளாளர் கம்பம் ஒன்றிய செயலாளர் இளைய நம்பி ஒன்றிய செயலாளர் கல்யாண குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் நிகழ்ச்சியில் அண்ணா திமுக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உறுப்பினர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உத்தம் பாளையம் பேரூர் அண்ணா திமுக செயலாளர் சக்கரவர்த்தி வெகு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஒன்றிய செயலாளர் கல்யாணகுமார் நன்றி கூறினார்