கோவை பன்னீர்மடை அருகே உள்ள தனியார் ரெசார்ட்டில் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்க மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்க கூட்டம் மற்றும் ஆய்வக உபகரணங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆய்வக விநியோகஸ்தகர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்க மாநில அளவிலான கருத்தரங்க கூட்டம் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த வருடம் 19வது ஆண்டாக மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்க கூட்டம் மற்றும் ஆய்வக உபகரணங்கள் கண்காட்சி கோவை பன்னீர்மடை அருகே உள்ள டார்சா ரெசார்ட்டில் 2 நாட்கள் நடைபெற்றது.
கோவையில் 3வது முறையாக நடைபெறும் இக்கூட்டத்தில் ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நாகர் கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவாட்டங்களில் இருந்து ஆய்வக விநியோகஸ்தர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் நாள் கருத்தரங்கில் இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வகமான மைக்ரோ பயோலாஜிக்கல் லேப் மணி, பி.எஸ்.ஜி.மெடிக்கல் கல்லூரி முதல்வர் சுப்பாராவ் மற்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கம் மென்மேலும் சிறந்து வளர வேண்டும் என வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்து ஆய்வக உபகரணங்களின் கண்காட்சியினை கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இதில் 25க்கும் மேற்பட்ட ஆய்வக விநியோகஸ்தர்களின் நிறுவனங்களில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அதில் புது வகையாக தொழில்நுட்பங்கள் கொண்ட ஆய்வக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இரண்டாம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள ஆய்வக விநியோகஸ்தர்களுக்கு உள்ள சந்தேகங்களை மற்றவர்களுடன் கலந்துரையாடி தெரிந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து மாநில அளவிலான ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மேலும் கலை நிகழ்ச்சிகளுடம் நடைபெற்றன.
இதில் கோவை ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் நரேந்திரகுமார், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் அறிவுநந்தன் உள்ளிட்டோர் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.