கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் 35 வது பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பில் சிறந்த விளங்கிய நான்கு மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டது.
ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் 35 ஆவது பட்டமளிப்பு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் நடைபெற்றது.
எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், டாக்டர் நாராயணசாமி கலந்து கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை செவிலியர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை கொடுத்து உரையாற்றினார்.
தொடர்ந்து ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் நிர்மலா, வரவேற்புரையாற்றி பேசினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இளங்கலை பட்டப்படிப்பில் கிர்த்தனா மற்றும் யுவதர்ஷினி சிறந்த மாணவருக்கான தங்கப்பதக்கமும்,முதுகலை பட்டப்படிப்பில் நிவேதப்ரியா மற்றும் ஆலிஸ் சில்வியா ஆகியோருக்கு சிறந்த மாணவருக்கான தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவில் இணைப்பேராசிரியர் நித்யா.எஸ்என்ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால்,ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிகளின் முதல்வர்கள், செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் கிரிஜா குமாரி, பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.