வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைப்படி பள்ளி மேலாண்மை குழு மறு சீரமைப்பு தேர்தல் ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்சுரேஷ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் க. செல்வம்,பொருளாளர் எஸ். ஆர். ராஜேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக திமுக நகர செயலாளர் பா. சிவனேசன் மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிதலைமையாசிரியர் மு. நாவளவன் வரவேற்று, உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறையைப் பற்றி விளக்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக சுமத்திரா, துணைத் தலைவராக கவிதா தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்,புதிதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.