தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கடந்த 3 ஆண்டுகளாக காவல் துணை கண்காணிப்பாளர் எம்.சுதிர் சிறப்பாக பணியாற்றி வந்தார்.
இவர் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்தார்
இந்நிலையில் பணிமாறுதல் காரணமாக தூத்துக்குடி செல்லுகிறார் அவரை பாராட்டும் விதமாக, தென்காசி மாவட்டம் திராவிடத் தமிழர் கட்சி சார்பில்
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்
கருவீரபாண்டியன்,வடக்கு மாவட்ட செயலாளர்
மகாலிங்கம்,வடக்கு மாவட்ட துணை செயலாளர் தமிழரசன், ஆகியோர் தலைமையில்
தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர்
சங்கை மதன்,வடக்கு மாவட்ட நிதி செயலாளர் கண்ணன்,சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி செயலாளர் வேல்முருகன்,மேலநீலிதநல்லூர் இளைஞரணி செயலாளர் திராவிட வீரன் ஆகியோர் முன்னிலையில் திராவிடத் தமிழர் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினார்கள்.