தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் மேளா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் சரகம் துணை பதிவாளர் தொல்காப்பியன் தலைமை தாங்கினார் கூட்டுறவு சார்பதிவாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி கள் மேலாளர் ஜெயராமன், மேற்பார்வையாளர் ள் ரவிக்குமார், கண்ணன், குருவிகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பிச்சை முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கடன் வழங்கும் முகாமினை தொடங்கி வைத்தனர்.
முகாமில் சிறு வணிக கடன், சுய உதவி குழுக்கள் கடன், மாற்றுத்திறனாளி கடன் மற்றும் விவசாய நகை கடன், பயிர் கடன், உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்குதல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் முதுநிலை எழுத்தர் அமுதா, நகை ஆசாரி முத்துக்குமார், கணினி ஆப்ரேட்டர் சங்கரேஸ்வரி, சங்கத்தின் விற்பனையாளர்கள் கலைமாமணி, பாக்கியராஜ், மாதவன், அமல்ராஜ், ஜெயபால் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.