பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்களின் பனை விதை நடவு மற்றும் சுற்றுச் சூழலுக்கு அவர் செய்யும் பணியை பார்வையிட வருகை புரிந்த கனடா தமிழ் சங்க நிர்வாகி ஜெயக்குமார் அவர்களும் மாணவி, பிரியா, மற்றும் சிங்கப்பூர் கார்த்திகா பாலா சென்னை காஞ்சிபுரம் கல்லூரி துணை முதல்வர் சங்கீதா, சென்னை பாக்சிங் பயிற்சியாளர் சரவணன் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியை. அருணா அம்மாள், பொறியாளர் ஜெதீசன், .நிர்மலா ஆகியோர் பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்களின் சமூகபணியை பார்வையிட்டு அவரோடு இணைந்து சமூக பணி செய்து கொண்டிருக்கும் தன்னார்வளர்களை பாராட்டும் விதமாக புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வந்தார்கள்,
அவர்களை தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி (DSC-society) தன்னார்வளர்கள் அவர்கள் அழைத்துச் சென்று பனை விதை நடவு செய்த இடங்கள், மற்றும் மியாவாக்கி குறுங்காடுகள் உருவாக்கிய இடங்கள் ஆகியவற்றை காண்பித்தார்கள்
மேலும் பனை ஓலையில் செய்யப்பட்ட ஆபரண நகைகளை மாணவி பிரியாவிற்க்கு அணிவித்து மகிழ்ந்தனர், மேலும் ஆரோவில் பிச்சாண்டி குளம் காட்டில் ஆரோவில் , லூர்த்துநாதன் எப்பினால், மற்றும் நிளஆராய்ச்சியாளர் கோபி அவர்களின் ஏற்பாட்டில் காட்டில் பனை விதை நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது,
கனடா மற்றும் சிங்கப்பூரிலிருந்து வருகை புரிந்த தமிழ் கலாச்சார அமைப்பைச் சார்ந்தவர்கள் ஆனந்தனின் பனை விதை நடும் நிகழ்ச்சியை பாராட்டி அவருடைய தன்னார்வலர்களுக்கும் நன்றியும் வாழ்த்தும் கூறினார்கள்.