அரியலூர் வாணி மகாலில், மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட திமுக துணை செயலாளர் அருங்கால் சி சந்திரசேகரன் வரவேற்றார்.மாநில திமுக சட்ட திட்ட குழு இணை செயலாளர்
சுபா சந்திரசேகர் கூட்டத்திற்கு வகித்தார்.
மாவட்டத் துணைச் செயலாளர் லதா பாலு,மாவட்ட பொருளாளர்கு.ராஜேந்திரன், .பொதுக்குழு உறுப்பினர்கள் சிஆர்எம் பொய்யாமொழி,ஆர்
எம் அன்பழகன், இரா பாலு, வி
எம் ஷாஜகான், சுமதி, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜன் உள்ளிட்டார் கூட்டத்திற்கு முன்னிலை வகித் தனர்.
கூட்டத்தில், மாவட்ட திமுக செயலாளாளரும் ,போக்குவரத்து துறை அமைச்சருமான சா . சி . சிவசங்கர் சிறப்பு அழைப் பாளராக பங்கேற்று,கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை அரியலூர் மாவட்ட, ஒன்றிய , நகர நிர்வாகிகள் சார்பில் சிறப்பாக கொண்டாடிட வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில்அரியலூர் மாவட்டத்தில்இருந்து பெருமளவு கழக நிர்வாகிகள் பங்கேற்ற வேண்டும். தமிழக முதல்வர் உத்தரவின்படிஜெயங் கொண்டம் மகிமைபுரத்தில் அமையவுள்ள
புதிய சிப்காட் தொழிற்பேட்டையில் நமது மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் பல்லாயிரக் கணக்கானோர் கட்டயம் வேலை வாய்ப்புபெறுவர்.விரைவில்
அரியலூர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் என்ற பெயரில் மாவட்ட திமுக கட்சி அலுவலக கட்டிடப்பணி தொடங்க விழா நடைபெற உள்ளது, ஆகவே கட்சி தொண்டர்கள், உற்சாகத் .துடன் உழைத்து வரும் 2026 , சட்டமன்றத் தேர்தலில் , அரியலூர் மாவட்டத் திலுள்ள இரண்டு தொகுதிகளையும் திமுக வெற்றியடைய கடுமையாக உழைத்திட வேண்டும் என பேசினார்.கூட்டத்தில்மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர் எம்பிபாலசுப்பிரமணியம்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் து.
அமர மூர்த்தி,ஒன்றிய திமுக செயலாளர்கள்தனசேகர்,
இரா.கென்னடி,பூ செல்வராஜ்,இரா மணிமாறன்,மா அன்பழகன், ரெ. அசோக சக்கரவர்த்தி,ரெங்க முருகன், கோஅறிவழகன்,ஆர் கலியபெருமாள்,வி எழில் மாறன்,நகரச் செயலாளர்கள்
இரா முருகேசன் , வொ .கோ கருணாநிதி,பேரூர் கழக செயலாளர்கள் பா. கோபாலகிரு ஷ்ணன்,அல்போன்ஸ்,ஒன்றிய சேர்மன் சுமதி,நகராட்சி தலைவர் சாந்தி, பேரூராட்சி தலைவர்கள் மலர்விழி,மார்க்ரேட்அல்போன்ஸ்,மாவட்டசார்பு அணிநிர்வாகிகள் இரா. ராமராஜன், க. தர்மதுரை,என் ஆர் ராமதுரை,தங்க இராம கிருஷ்ணன்,ஆதி இளங்கோவன்,
சி அந்தோணிசாமி,பானுமதி ராஜேந்திரன்,எம் ஜி இராஜேந் திரன்,கேசி லூயி கதிரவன்,மீனா சாமிநாதன்,இரா ரவிக்குமார், இரா குலோத்துங்கன், மரு. சே இளஞ் செழியன்,வை முருகான ந்தம், க. கருப்புசாமி,க.செல்வராஜ்,ம.ஜெயக்குமார் பொன் செல்வம், க.அருண் ராஜா கா இளங்கோவன் , மரு. செ.சஞ்சய் குமார் ஜோ வின்சென்ட் ராஜா,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் மாவட்ட திமுக துணை செயலாளர் ம.கணேசன் நன்றி கூறினார்.