கோவையில் இலக்கியம்,மற்றும் கவிதை படைப்புகளில் ஆர்வமுடைய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நளினி வெள்ளியங்காட்டான் சமூக நல அறக்கட்டளை துவங்கப்பட்டது…
ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக அறியப்படுபவர் வெள்ளியங்காட்டான்.
இராமசாமி என்ற பெயரை கொண்ட வெள்ளியங்காட்டான், விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியர்,, கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்..
இவரது எழுத்துக்களை உலகறிய செய்ததில் இவரது மகளான நளினி வெள்ளியங்காட்டான் பெரும் பங்கு வகித்துள்ளார்.
இந்நிலையில் மறைந்த நளினி அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது பெயரி்ல், நளினி வெள்ளியங்காட்டான் சமூக நல அறக்கட்டளை துவங்கப்பட்டது..
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,
அறக்கட்டளையின் நிறுவனர் மகேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து கவுரவ விருந்தினர்கள் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் சுப்ரமணியம்,
பேராசிரியர் ரமணி,ராஷ்ட்ரியா ரத்னா குருஜி சிவாத்மா,எழுத்தாளர் ரவீந்திரன்,தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம் வெள்ளியங்கிரி,
முனைவர் கார்த்திகேயன்,
முனைவர் அருவி தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டு நளினி வெள்ளியங்காட்டான் சமூக நல அறக்கட்டளையை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர்..
முன்னதாக
நளினி அம்மாவின் மகள்கள் இராஜேஸ்வரி மனோகரன்,சித்ரா,
மற்றும் பேத்தி ஸ்ரீநிதி மகேந்திரன் ஆகியோர் பேசுகையில்,
தமிழ் மொழியின் சிறப்பைப் பாரெங்கும் பறைசாற்றும் கவிஞர் வெள்ளியங்காட்டானின் படைப்புகளில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டுதல், கவிஞர் வெள்ளியங்காட்டானின் படைப்புகளில் முனைவர் பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகளில் ஆய்வுப்பணியை மேற்கொள்ளும் வசதியற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையினை ஆண்டுதோறும் வழங்குதல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு இந்த அறக்கட்டளை செயல்பட உள்ளதாக தெரிவித்தனர்..
விழாவில்,அறக்கட்டளை சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டும், கேடயமும் வழங்கி கவுரவிக்கப்பட்டது..