திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி ஓபுளாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் நிர்வாகிகளுக்கு கட்சி அடையாள அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வின் தலைமையாக ஆயக்குடி பேரூர் செயலாளர் வழக்கறிஞர்.சசிகுமார் தலைமையில் நடைபெற்றன.
தொடர்ந்து ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு வார்டு செயலாளர்கள் மூலம் கட்சி அடையாள அட்டையை அதிமுக முன்னாள் முப்பெரும்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நத்தம்.கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்து நிர்வாகிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற வேட்பாளர்
ரவி மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால்,நகர செயலாளர் முருகானந்தம்
ஒன்றிய செயலாளர் முத்துசாமி,ஆர் எம் டி சி மாரியப்பன்,அம்மா பேரவை அசோக்குமார், சதீஷ்குமார் ஹக்கீம் பாலசமுத்திரம் சக்திவேல்,
தாமோதரன், காமேஸ்வரன், முருகன், இராதாகிருஷ்ணன், அப்பாஸ் அலி,ரகுபதி, கற்பகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அடையாள அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றன..