மதுரையில் சாலைகளில் திரிந்த மாடுகளை பிடித்து மாநகராட்சி மாட்டுத் தொழுவத்திற்கு கொண்டு வந்த மாடுபிடி வீரர்கள் மதுரையில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு மாநகராட்சி தொழுவத்தில் அடைக்கப்பட்டன.
செல்லூர், தத்தனேரி, விளாங்குடி பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த 5 மாடுகள், 4 கன்றுகள் பிடிக்கப் பட்டன.
பிறகு, அவை மாநகராட்சி மாட்டுத்தொழுவத்தில் அடைக்கப்பட்டன. மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவசுப்பிர மணியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகையா, சுரேஷ்குமார், ஒப்பந்த பணி மாடு பிடி வீரர்கள் குழுவினர் இந்தப் பணிகளை மேற்கொண்டனர்.
பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.