தென்காசி மாவட்டம் வடகரை அடுத்துள்ள கரிசல் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறை மற்றும் காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் அப்பகுதியை சார்ந்த ஆறுமுகச் சாமி வயது (52) என்பவரை யானை தாக்கியதில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை நேரில் சந்தித்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் உடன் சஃபிக் அலி உள்பட பலர் உடன் இருந்தனர் இந்நிலையில் நேற்று இரவு கரிசில் குடியிருப்பு ஊருக்குள் புகுந்த யானை ஆனது இரவு 10 மணி வரை அந்த பகுதியை விட்டு செல்லாமல் ஊருக்குள்ளேயே சுற்றி வந்ததால் பொதுமக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் காவல்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது இந்நிலையில் இரவு 10:30 மணிக்கு யானை வனப்பகுதிக்குள் வனத்துறையினரால் விரட்டி அடிக்கப்பட்டது இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது