தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு வேகத்தடையில் எச்சரிக்கை கோடுகள் தேனி போலீசார் அதிரடி நடவடிக்கை தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்லக்கூடிய மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடையில் எச்சரிக்கை வெள்ளை கோடுகள் இல்லாததால் வேகத்தடையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு விலை மதிபற்ற மனித உயிர் பறிபோனது பொதுவாக இது போன்று சம்பவங்கள் நடக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மேலும் ஊடகங்களும் பத்திரிகைகளும் இது குறித்து பலமுறை செய்தி வெளியிட்டும் அதிகாரிகள் ஏனோ கண்டு கொள்ள வில்லை.ஆனால் விலைமதிப்பற்ற மனித உயிர் பறி போன பிறகுதான் இவர்கள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கின்றனர் இது தமிழகத்தின் விதி இதேபோல் நேற்று ஆகஸ்ட் 26 ஞாயிற்றுக்கிழமை மதியம் வேகத்தடையும் நெடுஞ்சாலையும் ஒரே மாதிரியாக இருந்ததால் வேகத்தடை தெரியாமல் ஒரு கார் விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் படுகாயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் . இதையடுத்து தேனி போலீஸ் துறையினர் தங்களது சொந்த முயற்சியில் வேகத்தடையில் எச்சரிக்கை கோடுகளை வரைந்து இனிமேலாவது விபத்து ஏற்படாமல் அதனை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளனர் இந்த நடவடிக்கையை தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தேனி போலீஸ் துறை அதிகாரிகளை எதுவாக பாராட்டினார்கள்