பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வண்ணாரம் பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
இத்திட்டத்தில் வ.களத்தூர், இனாம் அகரம், திருவாலந்துறை, பேரையூர் ஆகிய ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் பிரச்சினைகளை மனுவாக பதிவு செய்தனர். இக்கூட்டத்தில் வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமணி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வ. களத்தூர், திருவாலந்துறை, இனாம் அகரம், பேரையூர் ஆகிய ஊராட்சியில் இருந்து கலந்து கொண்டனர் மற்றும் அரசு அலுவலர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.