பெரியகுளம் அருகே அகமுடைய ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட உட்கடை கிராமமான சொக்கநலை மலை கிராமம் உள்ளது

இந்த மலை கிராமத்திற்கு ரோடு சாக்கடை கால்வாய் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை ஆனால் இவர்களுக்கு ஓட்டுரிமை ஆதார் கார்டு ரேஷன் கார்டு போன்ற அரசு ஆவணங்கள் உள்ளன இது குறித்து பலமுறை வாரம்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் குறைதீர்க்கும் நாட்களில் பலமுறை மனு அளித்தோம் எந்த நடவடிக்கையும் இல்லை இந்த நிலையில் நேற்று இந்த மலை கிராமத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா மற்றும் அரசு துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்

அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களின் குறைகளை மலை கிராம மக்களிடம் கேட்டறிந்தனர் உடன் அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் லதா ரஞ்சித் பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர் இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறும்போது கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் ஐந்து ஆண்டுகள் முடிந்து ஒரு சில மாதங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது

கடந்த ஐந்து ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் கலெக்டர் அலுவலகத்தில் எங்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட அரசு அதிகாரிகள் தற்பொழுது தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி இப்பொழுது வந்து பெயருக்கு உங்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு சென்று உள்ளார்கள் ஆனால் இவர்கள் நடவடிக்கை எடுப்பதற்குள் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து தேர்தல் வந்துவிடும் தேர்தல் தோல்வி வெற்றி பயத்தினால் மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *