வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் போதிய பராமரிப்பு இன்றி உள்ள கழிவறையைசீரமைத்து தர வேண்டும்,ஆலய திருக்குளம் கரையில் நடைப்பயிற்சிக்கு திறந்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என ஸ்ரீ பாடை கட்டி மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் ஆலய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்திற்குதினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்,இயற்கை உபாதைகளை கழிக்க போதிய கழிப்பிட வசதி இல்லாமல் பக்தர்கள் தவிக்கின்றனர், பெரும்பாலும் தாய்மார்களும், குழந்தைகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேற்படி ஆலயத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கழிப்பிடமும் போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. கழிப்பிடத்திற்கு செல்லக்கூடிய நடப்பாதைகளையும் சுத்தம் செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சுத்தம் செய்து பராமரிக்க ஆலய நிர்வாகத்தால் ஆள் போட வேண்டும்.மாரியம்மன் கோவில் திருக்குளத்தில் கரைப்பகுதியில் விளக்குகள் அமைத்து சுற்றுப்பாதையை சுத்தம் செய்து பக்தர்களுக்கு வசதிக்காக காலை, மாலைஇருவேளைகளில் நடைப்பயிற்சி வசதிக்காக திறந்து விட வேண்டும். நமது மாரியம்மன் ஆலயத்தில்நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும், புகழ்பெற்ற பாடைக் காவடி திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் வேண்டிக்கொண்டு பாடை காவடி எடுக்கும் போது, ஒருவர் பயன்படுத்திய அதே காவடியை மீண்டும் எடுத்துச் சென்றுஅதே காவடியை மற்ற பக்தர்களும் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதை மாற்றி புதிது புதிதாக காவடி எடுக்கும் வகையில் ஆலய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஸ்ரீ பாடை கட்டி மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கம் தலைவர் எம். எம். சண்முகவேல்,பொருளாளர் வி. எஸ். குமார், துணைத் தலைவர்கள் என். மாரிமுத்து,கோ. சண்முகசுந்தரம் யாதவ் ஆகியோர் மகாமாரியம்மன் ஆலய அலுவலகத்தில் மனுவாக அலுவலக திருக்கோயில் பணியாளர்களிடம் அளித்தனர்.