கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி. மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம். திருவாரூர் மாவட்ட ஊராட்சி மாதாந்திர கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு என்ற பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள் மாவட்ட ஊராட்சி செயலாளர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தங்கள் பகுதி தேவைகளை குறித்து விளக்கி பேசினர்
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் பேசுகையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் நிலுவை பணிகளை காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும் மாவட்ட ஊராட்சி நிதி என்பது அனைத்து ஊராட்சிகளில் நடைபெறும் வண்ணம் பணியாற்ற வேண்டும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் புகழை நிலை நாட்டும் வகையில் அவருடைய நூற்றாண்டு நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பாப்பா சுப்பிரமணியன் ஏ என் ஆர் பன்னீர்செல்வம் தமையந்தி சுஜாதா சோபா உள்ளிட்ட அனைத்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்