இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், அரசநெல்லிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று 31.08.2024 சனிக்கிழமை நடைபெற்றது.


இப்பள்ளி தலைமை ஆசிரியர் பெ.மகேஷ் தலைமை தாங்கினார் இதில் அரசு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளராக நெமிலி வட்டார வளமைய மேற்பார்வையாளர் தா.பாலு கலந்து கொண்டார்

சிறப்பு அழைப்பாளர்களாக அரசநெல்லிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் அ சேகர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் க.சங்கீதா கதிரவன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் .பா.வரலட்சுமி கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கிராம பொது மக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், இப்பள்ளி முன்னாள் மாணவர்கள், கல்வியின் மீது அக்கறை கொண்டவர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்வின் போது உள்ளாட்சி பிரதிநிதியாக
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் S.செந்தாமரை கண்ணன் R..கனியமுது தேர்வு செய்யப்பட்டார்கள் கல்வியாளராக ம.கார்த்திகேயன் ஆசிரியர் உறுப்பினராக இப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பி. பிந்து, தேர்வு செய்யப்பட்டார்கள்.

மேலும் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்தலில் SMC தலைவராக பா.மேனகா துணைத்தலைவராக பெ.தரணி மொத்தமாக 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்பு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கொ.ஏ.உஷா, இடைநிலை ஆசிரியர்கள் மு.பூந்தளிர், செ.செல்வசௌந்தரி, கு.பூங்கொடி
தா. கௌசல்யா மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வக மற்றும் பயிற்றுனர் பா.கைருநிஷா பேகம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கூட்டம் முடிவில் அரசநெல்லிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மேலாண்மை குழு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் ஏ.முருகன் நன்றிவுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *