புழல் அடுத்த சூரப்பட்டில் மாணவர்களுக்கான மாபெரும் ஓவிய கண்காட்சி அனிமா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செயிண்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையர் அன்வர்பாஷா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஓவிய கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரைந்த வண்ண ஓவியம் கண்காட்சியில் வைக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள் மாணவர்கள் இணைந்து வரையும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டு சிறந்த ஓவியங்களுக்கு நிறுவன தலைமை மேலாளர் வின்சென்ட் பரிசுகளையும் பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.
இதில் அனிமா ஆர்ட்ஸ் அகாடமி இயக்குனர் சிவராமன், உதவி ஆணையர் அழகேசன், ஆய்வாளர் சிவமணி, ஆடிட்டர் கணேஷ்சுப்பிரமணியன், பிரதாப் செல்வம் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.