சங்கரன்கோவில்.-
தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை ஊர்தி வழித்தட துவக்க விழா சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகித்தார்.
தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் ரிச்சர்ட் ராஜ் வரவேற்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து நடமாடும் கால்நடை மருத்துவர் சிகிச்சை ஊர்தி வழித்தட சேவை துவக்க விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் தமிழ்செல்வி போஸ், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி சரவணன், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்
விஜயலெட்சுமி கனகராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கால்நடை உதவி இயக்குநர்கள் டாக்டர்கள் மகேஷ்வரி, திருநாவுக்கரசு, ரஹ்மத்தூல்லா, முருகன், கால்நடை அவசர ஊர்தி கால்நடை மருத்துவர் சந்திரசேகர், கால்நடை உதவி மருத்துவர்கள் அந்தோணிராஜ், நாகராஜன், வசந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் சுமதி நன்றி கூறினார்.