தென்காசி மாவட்டம் நெல்கட்டும் சேவல் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவர் 309- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது வெள்ளையர்களை எதிர்த்து வீரவாள் சுற்றி போரிட்ட மாமன்னர் பூலித்தேவர் பிறந்த நாள் விழாவில் மாவீரன் பூலித்தேவரின் வீரமும் திமிரும் தமிழர்களாக எங்களுக்கு உண்டு என்றும்
பீரங்கியும் தூப்பாக்கியும் எதிர்த்து வெறும் வாளையும் வேல்லையும் கொண்டு யுத்தம் செய்த பெரும் பாட்டனர் புலித்தேவர் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசியவர் திரை உலகத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்து துறைகளிலும் இருப்பதாகவும் சினிமா துறையில் பொருத்தவரையில் குற்றச்சாட்டு சொல்லியதால் அது வெளிச்சத்திற்கு வந்ததாகவும் இது எந்த துறையிலும் இதுபோன்று ஏற்படக்கூடாது எனவும் கூறினார்.
தற்போது கேரவன் போன்ற வாகனங்களில் கூட கேமராக்கள் அமைத்து உடை மாற்றுவதை படம் பிடிப்பது அநாகரிகமான செயல் எனவும் இது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார் இது போன்ற செயல்கள் இனி நடக்காததற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும் எனவும்
ஆளுநருக்கு அறிவு குறைவாக உள்ளது உலகத்திற்கே அறிவை கடன் கொடுத்த மக்கள் நாங்கள் என்றும்
புதிய கல்வி கொள்கை முறையில் சிறப்புகள் ஏதும் இல்லை எனவும் குலக்கல்வி முறையை மறுபடியும் ஊக்கப்படுத்தி வருவதாகவும்
புதிய கல்விக் கொள்கை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிற மரண சாசனம் என்றும் அறிவார்ந்த பெருமக்கள் சொல்லும் நிலையில் புதிய கல்விக் கொள்கை ஏற்புடையது அல்ல எனவும் சீமான் தெரிவித்தார்.