போச்சம்பள்ளி சிப்காட் திட்ட அலுவலகத்தில் தொழில் முனைவோருக்கான கடன் உதவி சிறப்பு முகாம்- 100ற்கும் மேற்பட்டோர் புதிய தொழில் முனைவோர் பங்கேற்பு இதில் 11 கோடிக்கான கடன் கோரி அலுவலரிடம் விண்ணப்பத்தினைகொடுத்தனர்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 6 வரை கடன் உதவி சிறப்பு முகாம் நடத்திக் கொண்டு வருகிறது. இது தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று கொண்டு வருகிறது

அதன் முக்கிய அங்கமாக இன்று போச்சம்பள்ளி சிப்காட் திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது இதில் கிட்டத்தட்ட 100ற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டார்கள் மண்டல மேலாளர் ராஜு வரவேற்புரை ஆற்றினார். மண்டல மேலாளர் மோகன் திட்டங்களை விளக்கி அதன் பயன்களை விரிவாக விரிவுரை ஆற்றினார். பர்கூர் சிப்காட் அலுவலர் சிந்து உட்பட முக்கிய அலுவலர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்ட முடிவில் ஆஹா நிறுவனம் 7 கோடி கடன் உதவிக்கான விண்ணப்பத்தினை கொடுத்தனர் மற்றும் சிவன் பில்டர்ஸ் 3 கோடி கடன் உதவி கேட்டு விண்ணப்பத்தினை கொடுத்தனர். மற்றும் கோவிந்தன் கிரானைட், ஜெகதேவி, 1 கோடிக்கான விண்ணப்பத்தினை கொடுத்தனர்.

ஆக மொத்தம் 11 கோடிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
கௌதம் மாடர்ன் ரைஸ் மில், தர்மபுரி ரூ. 2 கோடியே 80 லட்சத்திற்கான Sanction Order கொடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் TIIC-ன் கடன் உதவி மற்றும் திட்டங்கள் மானியம் மற்றும் இதர சலுகைகள் எடுத்துரைக்கப்பட்டது. புதிய தொழில் முனைவோர் இளைஞர்கள் பலர் திட்டத்தினை விரிவாக புரிந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *