மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி பவித்ராவிற்கு பாராட்டு விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். நீட் தேர்வில் வெற்றி பெற்ற விதம், விடா முயற்சி, கடுமையான உழைப்பு ஆகியன குறித்து பவித்ரா சிறப்புரையாற்றி
னார். பவித்ரா மற்றும் அவரது தாய், தந்தை இருவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் தென்னவன் பேசியது;
ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ கனவை நிறைவேற்றலாம். இதற்கு பாடங்களை புரிந்து படிக்க வேண்டும் எனக் கூறினார்.
பெற்றோர்கள் வாழ்த்துரை வழங்கினர். ஆசியை அகிலா நன்றி கூறினார். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.