மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடிநீர் இணைப்பு வேண்டி 4 மனுக்களும், பாதாளச் சாக்கடை இணைப்பு வேண்டி 10 மனுக்களும், தெருவிளக்கு, சாலை மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி 7 மனுக்களும். சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 10 மனுக்களும், தெரு பெயர், காலிமனை வரி, தொழில்வரி விதிப்பு வேண்டி 7 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 2 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 4 மனுக்களும் என மொத்தம் 44 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயர் இந்திராணி நேரடியாக பெற்றுக்கொண்டார்.

இம்முகாமில் துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் ஷாஜகான், நகர்நல அலுவலர் வினோத்குமார், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற்பொறியாளர் சுந்தரராஜன், நிர்வாக அலுவலர் அகமது இப்ராஹிம், உதவி வருவாய் அலுவலர் சித்ரா, கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ஆனந்தம், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *