திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலை மன்னவனூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டில் உள்ள முக்கிய சாலைகளில் கண் துடைப்பு பணி செய்யும் நெடுஞ்சாலைத்துறை. மன்னவனூர் ஊரிலிருந்து கைகாட்டி செல்லும் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சாலையை மாற்றி நிரந்தரமான, தரமான சாலை அமைக்கப்படுமா ? மழை காலம் நெருங்கி வரும் சூழ்நிலையில் அவசர காலங்களில் இச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்களுக்காக பணி செய்வார்களா நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ? என கேள்வி எழுப்பும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.