பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட, தேனூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பயிர் அமைப்பு அறக்கட்டளையானது பல்வேறு புவி சார்ந்த முன்னெடுப்புகளை முன்னெடுத்து செயல்படுத்தி வருகின்றது,

அதன் ஒரு பகுதியாக புவி வெப்பமயமாவதை தடுக்கும் வகையில்,ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட சிறுவயலூர் ஊராட்சிக்குட்பட்ட,பழைய விராலிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மயானத்தில் 300 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு அக்கிராம்த்தின் நண்பர்கள் குழு உதவியுடன் செப்-05 இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் நண்பர் குழு அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்