இந்திய சுதந்திர போராட்ட வீரரும் சுதேசி கப்பலோட்டிய தமிழனுமான வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 153வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள  சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மரியாதை செய்யும் நிகழ்வை தமிழ்நாடு வ.உ.சி பேரவை நிர்வாகிகளும் அதன் மாநில இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் வ.உ.சி யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம் பெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜூலியட், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன்,  மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாநகர பகுதி செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், முன்னாள் கவுன்சிலர் செண்பக செல்வன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சத்யாலட்சுமணன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல் ராஜ், அண்ணா தொழிற்சங்க மண்டல போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்வி குமார், தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் மெஜிலா துணை செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் ஜான்சன் தேவராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் டைகர் சிவா, பரிபூரண ராஜா,  சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஏகே மைதின், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், கே.கே.பி.விஜயன், நவ்சாத், மிக்கேல், பழனி, சங்கர், ஜெயக்குமார், எம்ஜிஆர் நடராஜன், கனகவேல், முன்னாள் கவுன்சிலர் தமிழரசி, மற்றும் பால ஜெயம், சாம்ராஜ், உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *