சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 154 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தே.மு.தி.க தொண்டர்கள் படைசூழ திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக மதுரை புதுஜெயில் ரோட்டிலுள்ள முன்னாள் மேயர் முத்துப்பிள்ளை திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் தெற்கு மாவட்ட சார்பாக மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் தொண்டர்கள் கலந்து கொண்டனர்