ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செங்குன்றத்தில் 40 வருடத்திற்கு முன் பள்ளியில் படித்த மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு .
செங்குன்றம் செய்தியாளர்
செப்.5
ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு செங்குன்றத்திலுள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் ஒன்றினைந்து அக்கால கட்டத்தில் படிப்பறிவை தந்த ஆசிரியர்களை பள்ளிக்கு அழைத்து அவர்களை கௌரவப்படுத்தி மரியாதை செய்த நிகழ்வு கான்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
தனியார் பள்ளியின் 50 ஆண்டுகள் நிறைந்த நினைவு நாளில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் தற்போது பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களும் இணைந்து ஒருவரை ஒருவர் சந்தித்தும் பழைய நினைவுகளை நினைவு கொள்ளும் அபூர்வ சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது .
மாணவர்கள் தங்களது வாழ்நாளில் கல்வி போதித்த ஆசிரியர்களை பார்த்து கண்ணீர் மல்க இருகரம் கூப்பி வணங்கி அவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கட்டி அணைத்துக் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதுமட்டுமல்லாமல் தனது முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து தங்களது பள்ளி பருவத்தை மறுபடியும் நினைவிற்கு கொண்டுவந்து இன்று நாளில் நாம் வாழ்வில் ஒரு முக்கிய பொறுப்பில் வாழ்ந்து வருவதாகவும் அதற்கு இந்த பள்ளியின் ஆசிரியர்கள்தான் காரணம் எனவும் வயதான ஆசிரியர்களின் வாழ்த்துக்களை பெற்றதால் முழு மகிழ்ச்சியுடன்ஆனந்தத்தில் திகைத்தனர்.
இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் தொழில் அதிபர்களாகவும் மருத்துவர்களாகவும் இன்ஜினியர்களாகவும் காவல்துறையில் பணியாற்றியவர்களாகவும், அரசு சார்ந்த பதவிகளில் உயர்ந்த நிலையில் இருப்பதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.