கோவையில் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324- சி மாவட்டத்தின் மகாகவி பாரதி மண்டல ஆலோசணை கூட்டம் நடைபெற்றது.இதில் 18 சங்க நிர்வாகிகள் மற்றும் நான்கு வட்டார தலைவர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்…
பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மாவட்டத்தின் மகாகவி பாரதி மண்டல கலந்தாய்வு கூட்டம் காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
மகாகவி பாரதி மண்டல தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இதில்,பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் ஆளுநர் டாக்டர் நித்தியானந்தம்,முதலாம் துணை ஆளுநர் ராஜசேகர், இரண்டாம் துணை ஆளுநர் செல்வராஜ்,முன்னால் ஆளுநர்கள் டாக்டர் பழனிசாமி,குட்வில் அவார்டி ஜீவானந்தம், கருணாநிதி, ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
ஜி.எல்.டி.ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில்,
சிறப்பு விருந்தினர்களாக ஃபேரா (FAIRA) பொதுச் செயலாளர் நேரு நகர் நந்து , கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் .சேகர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்..
கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள மகாகவி பாரதி மண்டல மாநாட்டை சிறப்பாக நடத்துவது, சங்கத்தில் லயன்ஸ் உறுப்பினர்களை அதிகமாக சேர்ப்பது,
மார்பக புற்றுநோய் கண்டறியும் மருத்துவ குழு வாகனத்திற்கு நிதி திரட்டுவது என பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசணை செய்யப்பட்டது..
தொடர்ந்து மண்டல கையேடு வெளியிடப்பட்டது..
கூட்டத்தில் அமைச்சரவை நிர்வாகிகள்
ஜி.ஏ.டி,ஜி.எம்.டி,ஜி.எஸ்.டி,ஜி.இ.டி
ஜி.எம்.ஏ. ஒருங்கிணைப்பாளர்கள், 18 சங்க நிர்வாகிகள்,
உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் வட்டாரத் தலைவர்கள், என பலர் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில் மகாகவி பாரதியார் மண்டலத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் சுப்பு ஆகியோரின் 25 வது திருமணநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் 25 வது ஆண்டு மணநாளை கொண்டாடும் செந்தில் குமார் சுப்பு இணையருக்கு கூட்டத்தில்
கலந்து கொண்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
நிகழ்ச்சியை வட்டாரத் தலைவர்கள் மோகன்ராஜ், ஸ்ரீதர், திவாகர், வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்..
விழாவில் மகாகவி பாரதியார் சங்கத்தின் அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும் நினைவுப் பரிசும், மண்டல கையேடும் வழங்கப்பட்டது..