கோவை டிரினிட்டி பள்ளியில் நடைபெற்ற தாத்தா பாட்டி தினத்தை முன்னிட்டு தாத்தா பாட்டிமார்கள் தங்களது பேரக்குழந்தைகளோடு விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற மகிழ்ச்சியடைந்தனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது.இங்கு தாத்தா பாட்டி தினத்தை முன்னிட்டு தாத்தா, பாட்டி மற்றும் பேரக்குழந்தைகளுக்கு இடையே உள்ள பிணைப்பைக் காட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் மாணவர்கள் தங்கள் தாத்தா பாட்டி உடன் உற்சாகத்தோடு பங்கேற்றனர். விழாவில் தாத்தா பாட்டி மற்றும் பெற்றோர்களுக்கு பாட்டுக்கு பாட்டு போட்டி நடத்தப்பட்டது.இப்போட்டியில் தாத்தா மற்றும் பாட்டிமார்கள் பழைய படங்களின் பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆற்றினர்.
அதே போல அடுப்பில்லா சமையல் போட்டிகளில் எண்ணற்ற புதிய வகையான உணவுகளை சமைத்து அசத்தினர்.இதனை தொடர்ந்து 90ஸ் கிட்ஸ் விஎஸ் 2கே கிட்ஸ் என்ற தலைப்பில் பட்டிமன்றத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி பள்ளியின் தாளாளர் அருட் தந்தை மார்டின் மற்றும் முதல்வர் டாக்டர் தனலட்சுமி பரிசு வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சிறப்பு பாடல் பாடி விழாவிற்கு வருகை தந்த தாத்தா பாட்டிகளுக்கு மரியாதை செய்தார்.பள்ளியின் முதல்வர் வருகை தந்த அனைவரையும் வாழ்த்தி தாத்தா பாட்டி மற்றும் பேரக் குழந்தைகளுக்கு நடுவே உள்ள அன்பையும், இணைப்பையும் குறித்து பேசினார்.