திருவாரூர் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணியினர் சார்பாக 35 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது
அந்த துண்டு பிரசுரத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் விதமாக பொய்யான ஆதாரம் இல்லாத கருத்துக்களையும் மததுவேச கருத்துகளையும் தமிழகத்திற்கு ஆபத்து என்றும்,மதமாற்றம் செய்கிறார்கள்
என்றும் லவ் ஜிகாத் செய்கிறார்கள் என்றும் ஒரு பொய்யான அவதூறான செய்தியை பரப்பி திருவாரூர் நகரத்தில் ஒரு தாய் மக்களாக ஒற்றுமையாக இந்து சகோதரர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்து வரும் நிலையில் வெறுப்பை விதைக்கும் விதமாகவும் மத மோதல்களை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் விதமாகவும் நடந்து கொண்ட இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவாரூர் நகர எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து மனு அளிக்க பட்டது