தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோட்டிலுள்ள வ.உ.சி கல்லூரியின் முன்புறம் உள்ள பகுதியில் பெண்களுக்கென்று பிரத்யேகமாக பணிகள் நடைபெற்று வரும் பூங்காவை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்ற பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.